
உயிரிழந்த உதை பந்தாட்ட வீரர் பியூஸ்லசுக்கு , இறுதிப் போட்டியை காணிக்கை ஆக்குவோம் என யாழ் உதை பந்தாட்ட, லீக்கின் தலைவர் இ.ஆனோல்ட் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துளளார்.
இலங்கை உதை பத்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாணமும்,தெற்கு மாகாணமும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இறுதிப் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு,யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
போட்டியின் அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, இலங்கை உதை பந்தாட்ட சம்மேளனத்தின் அழைப்பின் பெயரில் வருகை தரவுள்ளார்.
ஆகவே எமது அணிக்கு உற்சாகம் வழங்க வேண்டும். ஆகவே குழப்பங்கள் இல்லாமல் இந்த போட்டி நடைபெற வேண்டும். இவ்வாறான போட்டிகளில் சிறப்பாக விளையாடி தேசிய மட்டம் வரை செல்ல வேண்டும்.
அவ்வாறு சென்ற திறமையான வீரர் ஒருவரை நாம் இழந்து நிற்கின்றோம்.
மாலை தீவில் எங்கள் மண்ணின் உதை பந்தாட்ட வீரர் பியூஸ்லஸ் ஐ உயிரிழந்துள்ளார். அது எமக்கு பெரிய இழப்பு.ஆகவே இந்த போட்டியில் எமது மாகாண அணி வெற்றி பெற்று, அந்த வெற்றியை உயிரிழந்த எமது வீரருக்கு காணிக்கை ஆக்குவோம் என்றார்.