
கொழும்பு, மார்ச் 3: கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை துறையில் நிலையான அபிவிருத்தியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களையும் முதலீடுகளையும் உலக வங்கி போன்ற அமைப்புக்களிடம் இருந்து வரவேற்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.