பாடசாலையொன்றின் உப அதிபரைக் கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் கம்பஹா, பியகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி சியம்பலாப்பே பகுதியில் வைத்துக் குறித்த உப அதிபர் வலுக்கட்டாயமாக ஜீப் ரக வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் வீடொன்றிற்கு கடத்திச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பியகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.