
நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியினால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
உண்மையில் இப் பொருளாதார வீழ்ச்சி தற்போது உள்ள அரசாங்கம் ஒழுங்கற்ற முடிவுகளினாலே ஆகும்.
மக்கள் நாட்டில் எரிபொருளிற்கு வரிசையில் நிற்கின்றனர், விவசாயிகள் தமது வயலிற்கு நீர் பாய்ச்ச முடியாமல், மோட்டரிற்கு டீசல் இல்லாது நிற்கின்றனர்.
அதே போல எரிபொருள் பற்றாக்குறை, பல துறைகளில்மின்சார துண்டிப்பு 7மணித்தியாலத்திற்கு மேல் ஏற்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறை அன்றாட வாழ்வில் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் காணப்படுகிறன.
பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ள முடியாமல் உள்ளது. ஔடத உற்பத்தி மற்றும் அவை தட்டுப்பாடு காணப்படுகிறது.
ஆனால் இவ் அரசாங்கம் உறைந்த நிலையில் உள்ளது. மக்களிற்கு, நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிற்கு எந்த ஒரு பதில் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதன் மூலம் விளங்குவது, இவ் அரசாங்கத்திற்கு சரியான முடிவுகள் தீர்வுகள் எடுக்க முடியாத நிலையில் உள்ளது என்று.
நாட்டில் 2021 ஆம் ஆண்டில் 2020 விட டொலர்கள் அதிகமாகவே அதாவது 2021 ஆம் ஆண்டுஜூன் மாதம் வரை அதிகமாகவே இருந்தது, அதன் பின்னரே டொலர் பற்றாக்குறை தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.
நிதி அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், இவ் அரசாங்கமும் முட்டாள் தனமான முடிவுகளால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல டொலர் பற்றாக்குறை இருந்த நிலையில் சீனா உரக்கப்பலிற்கு டொலர் கணக்கில் வழங்கினர்.
5g உரம் கூட நாட்டிற்கு வழங்காமல் அநாவசியமற்ற டொலர் வழங்கினர்.
இவ்வாறு நாட்டில் டொலர்களை வீணடித்துள்ளனர் என்றார்.