பிரதமர் ஹரிணி அமர சூரிய கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு.
கிளிநொச்சிமுரசு முரசுமோட்டையில் சந்திப் பிள்ளையார் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் ஹரிணி அமர சூரிய, மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு அபிவிருத்தி தொடர் திட்டம் தொடர்பாகவும் மக்களின் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வினை உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எ
னவும் தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில் நாளைய தினம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட் வெளிவர உள்ளதாகவும் அதில் ஏழை எளிய மக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்ட வகையில் நாளைய தினம் வெளிவர உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து மக்கள் பிரதமரி டம்பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர், கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோத செயற்பாடுகள் பாரிய அளவிலாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி , சட்ட விரோத மணல் அகழ்வு போன்ற பல்வேறு வகையான குற்ற செயல்கள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்கள்
.


