முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர் -ஏமாற்றமடைந்த கேப்பாபிலவு மக்கள்.

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை சந்திப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினரும் வருகை தந்திருந்த போதிலும் அவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் இன்றையதினம் (16) மறுக்கப்பட்டிருந்தது.

மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதமரை சந்திக்க வந்த கேப்பாபிலவு மக்கள் அவரை சந்திக்க முடியாது ஏமாற்றமடைந்தனர். இது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி காணி உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.

தாம் அமைச்சர் சந்திரசேகரனின் அழைப்பின் பேரில் காணி விடுவிப்பு தொடர்பாக வந்திருந்த போதிலும் ஒரு நிமிடம் கூட தமக்கு ஒதுக்கப்படவில்லை. என்ற கருத்து இங்கே வெளிப்படுத்தப்பட்டுள்ளது

இவர்களை நம்பாத தாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *