
இலங்கையில் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் ஆண்டுதோறும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ஹஜ் யாத்திரை ஏற்பாட்டுப் பொதிக்கான செலவு நிர்ணயம், ஹஜ் முகவர் நிறுவனங்களின் செயற்பாடுகள், ஹாஜிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றவை தொடர்ந்தும் விவாதப் பொருளாக உள்ளன. 2025ம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளிலும் இதே நிலைமை இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஹஜ் குழுவின் பரிந்துரைக்கே அப்பாற்பட்ட தொகையை பெரும்பாலான ஹஜ் முகவர் நிறுவனங்கள் அறிவித்திருப்பது புதிய முரண்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது.