
நாட்டின் ஜனாதிபதியாவதற்கான பாரிய கனவில் விமல் வீரவங்ச காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் பதவி நீக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது பிரசார மேடைகளில் முன்னாள் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கடுமையான பிரசாரங்களில் விமல் வீரவன்ச ஈடுபட்டார்.
இந்த நிலையில், தற்பொழுது ஒரே பிரசார மேடையில் ஒன்றிணைவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் மிகவும் ராஜதந்திரமானவர்கள் என மேலும் தெரிவித்தார்.