
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று நீக்கப்பட்டனர்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், அவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், புதிய எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
அதேநேரம், புதிய மின்சக்தி அமைச்சராக, பவித்ரா வன்னியாராச்சி சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு அறிவிக்கப்படவுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் நடத்தவுள்ள விசேட ஊடக சந்திப்பில் தங்களது நிலைப்பாடு அறிவிக்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.