
யாழ்ப்பாணம், மார்ச் 04
இலங்கை அரசின் இருண்ட யுகத்தை அகற்றி ஒளியை ஏற்படுத்தகோரி ஏ – 9 வீதியில் விளக்கேந்திய போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றிரவு முன்னெடுத்தது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் அழைப்பு விடுத்த போராட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் உள்ள யாழ். நகர் வரவேற்கின்றது வளைவின் முன்னால் ஏ 9 வீதியை மறிந்தும் வளைவின் முன்பாகவும் அரை மணிநேரம் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் சகல பிரதேசத்திற்கும் ஏழரை மணிநேர மின்வெட்டு என்பது எந்தக் காலத்திலும் இல்லாத ஒரு கையறு நிலமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சிலரை அல்ல நாட்டின் ஆட்சியை மாற்றும் வரையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதோடு ஆட்சிக்கு வாக்களித்த மக்கள் வீதிக்கு வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருடன் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களுடன் மாநகர முதல்வரும் பங்குகொண்டிருந்தார்.