42000 ரூபா நிவாரணம் பெற்ற வெத ஆராய்ச்சி! அம்பலப்படுத்திய NPP உறுப்பினர்!

கடற்றொழிலாளர்களுக்கு 150 ரூபாய் எரிபொருள் நிவாரணம் வழங்குவதாக குறிப்பிட்டீர்கள். ஆனால் அதை வழங்கினீர்களா என பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆராய்ச்சி பாராளுமன்றில் ஆளுங்கட்சியை நோக்கி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்குப் பதில் அளித்த ஆளும் கட்சி உறுப்பினர் ரத்ன கமகே,

150 ரூபாய் நிவாரணம் வழங்குவதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. 

கடற்றொழிலாளர்களுக்கு  நாங்கள் டீசல் ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் வீதம் கல உரிமையாளர்களுக்கு வழங்கி இருக்கிறோம்.

அதில் இருக்கின்ற மட்டுப்பாடு மூன்று லட்சம் ரூபாய். ஒரு கடற்பயணத்திற்கு உயர்ந்த பட்சம் 3 லட்சம் ரூபா அளவில் வழங்கப்பட்டிருக்கிறது. 

சிறிய கலங்களுக்கு 39 ரூபா அளவில் வழங்கப்பட்டிருக்கிறது. கௌரவ உறுப்பினர் வெதஆராய்ச்சி அவர்களே உங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. உங்களது வங்கிக் கணக்கில் 42,400 ரூபா வைப்பு செய்யப்பட்டிருக்கிறது. உங்களது படகுகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. 

இல்லை என்று உங்களால் குறிப்பிட முடியுமா? நீங்களும் இதனை பெற்றிருக்கிறீர்கள். 

முன்னாள் பிரதி அமைச்சர், ராஜாங்க அமைச்சர் இவரும் நிவாரணத்தை பெற்றிருக்கிறார். 

நிவாரணத்தை பெற்றுக் கொண்டு இல்லை என்று குறிப்பிடுகிறார். இது இழிவானதொரு விடயம் எனத்தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *