56 இலட்சம் பேர் வறுமையில்; அஸ்வெசும மட்டும் போதுமா? சஜித் பிரேமதாச சபையில் கேள்வி!

அஸ்வெசும கொடுப்பனவை வழங்குவதன் மூலம் மாத்திரம் வறுமையை ஒழிக்க முடியுமா என ஆளும்கட்சியை நோக்கி எதிர்க்கட்சித்தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், 

29% வறுமை நாட்டில்  காணப்படுகிறது என ஜனாதிபதி  வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் சபையில் முன்வைத்திருக்கின்ற 2024 முன்னேற்ற அறிக்கையில்  செயற்றிட்டமாக  2025 தொடக்கம் 2029 வரையான காலப்பகுதிகள் வறுமைக்கு முகம் கொடுத்து இருக்கின்ற இரண்டு மில்லியன் குடும்பங்களை வலுவூட்டுவதாக நீங்கள்  குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.

அதாவது இரண்டு மில்லியன் குடும்பங்களை வலுவூட்டுவது என்பது சிறந்ததொரு விடயம் என்றாலும் இந்த நாட்டில் முழுமையான வறுமை நிலை என்ன?

உலகவங்கி அறிக்கையை பார்த்தால் 56 லட்சம் பேர்  வறுமையில் உள்ளவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள். இவ்வாறான தரவுகளை கூட தெரிந்து கொள்ளாமல் எப்படி வறுமையை ஒழிப்பது?

இந்த அஸ்வெசும கொடுப்பனவை வழங்குவதன் மூலம் மாத்திரம் வறுமையை ஒழிக்க முடியுமா? வறுமையை ஒழிப்பதற்கு சேமிப்பு, முதலீடுகள், உற்பத்தி, ஏற்றுமதி, நுகர்வு இந்த ஐந்து பகுதிகளும் அதில் காணப்பட வேண்டும்.

ஆனால் தற்போது நுகர்வு மாத்திரம்தான் காணப்படுகிறது. நிதி தொகை ஒன்று வழங்கப்படுகிறது. அது நுகர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஏனைய பகுதிகள்  நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைத் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்பதனை  நான் தெளிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *