கொழும்பு நகரில் இருக்கின்ற மக்களுக்கு உரித்தான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தனியார் நிறுவனங்கள் செய்வது போன்று பண முதலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது என பாராளுமன்ற முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், சுயதொழில் செய்து வாழும் 20,000 குடும்பங்கள் கொழும்பு நகரில் இருக்கின்றன. பொரளையிலும் யூனியன் பிளேசிலும் வீடமைப்புத் திட்டங்கள் இருக்கின்றன. அவையும் 9 மில்லியன், 10 மில்லியன் தொகையில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.
கொழும்பு நகரில் இருக்கின்ற மக்களுக்கு உரித்தான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபை என்ன செய்கிறது? தனியார் நிறுவனங்கள் செய்வது போன்று பண முதலைகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.
இவ்வாறு வழங்கி இந்த வீட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இது மாற்றமடைய வேண்டும். 450 சதுர அடி வீடு 10 மில்லியன் ரூபா எனத் தீர்மானிக்கப்பட்டது.
பத்து மில்லியன் செலுத்தி ஒரு வீட்டை பெற முடியுமான வகுப்பிலா குறைந்த வருமானம் பெறும் மக்கள் இருக்கிறார்கள்? அவர்களால் முடியாது. ஆகவே நல்ல வீடுகளில் இருப்பவர்கள் தான் அந்த வீடுகளை கொள்வனவு செய்கிறார்கள்.
ஆகவே நீங்கள் இதனை நன்றாக சிந்தித்துப் பாருங்கள். ஒருகொடவத்தையிலும் 1100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட வருகின்றன . அந்த வீடுகளையும் வாடகைக்கு இருப்பவர்களுக்கு வழங்குமாறு தான் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் உரிய மக்களுக்கு கிடைக்கின்றனவா என்பதுதான் பாரிய பிரச்சினை. நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீடுகளைப்பெற்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் கொழும்பு நகரில் உள்ள வீடற்றவர்களுக்கு அந்த வீடுகள் கிடைக்காது. ஆகவே இதில் அவதானத்தை செலுத்த வேண்டும் எனத்தெரிவித்தார்.