கடன் மறுசீரமைப்பின் கீழ் ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பரிமாற்றப் பத்திரங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (07) நடைபெற்றது.
நிதி அமைச்சில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜப்பான் தூதுவர் அகியோ இசோமாட்டா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன,
“இலங்கை மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலமே இந்நாட்டின் பொருளாதாரத்தை நிலையாகவும் வலுவாகவும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்” என்று கூறினார்.