கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பிராந்திய மதுபானப் புனர்வாழ்வு நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக நேற்றையதினம் தர்மபுரம் புனர்வாழ்வு நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ்.லக்சன் என்னும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.