
அக்குறணை குருகொட பாடசாலைக்கு ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி மீள திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டபோது, அதனை அருகிலுள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமை எந்த விதத்தில் தவறாகும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு, நல்லாட்சி அரசாங்க காலத்தில் அக்குறணை அஸ்ஹர் கல்லூரியின் அதிபர் நியமன விவகாரத்தில் தான் எவ்விதமான தலையீடுகளும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.