சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்; முதலாவது அரையிறு போட்டி இன்று!

இந்தியாவில் நடைபெறும் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கெடுக்கும் முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது.

எட்டு அணிகள் பங்கெடுத்த இந்த தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ், இந்தியா மாஸ்டர்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் மாஸ்டர்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் ஆகியவை அரையிறுதியில் தங்கள் இடங்களைப் பிடித்துள்ளன.

தென்னாப்பிரிக்க மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் ஆகியன தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

இந்தியா மாஸ்டர்ஸ் அணி ஐந்து போட்டிகளில் இருந்து எட்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், இன்று ராய்ப்பூரில் நடைபெறும் முதல் அரையிறுதியில் போட்டியில் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸுடன் போட்டியிடும்.

இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகும்.

இந்தியா மாஸ்டர்ஸ் அணியைப் போலவே எட்டு புள்ளிகளுடன் உள்ள இலங்கை மாஸ்டர்ஸ் பெற்றிருந்தாலும், நிகர ஓட்ட விகிதத்தில் சிறந்து விளங்குவதனால் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (14) ராய்ப்பூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் அவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள மேற்கிந்தியத்தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை எதிர்கொள்வார்கள்.

இரண்டு அரையிறுதிப் போட்டியில் வெற்றி கொள்ளும் இரு அணிகளும் ஞாயிற்றுக்கிழமை (16) ராய்ப்பூரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக மோதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *