ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இராணுவ சீருடை அணிந்த நிலையில், மேற்கு ரஷ்யாவில் உக்ரேனியப் படைகளை விரைவாக தோற்கடிக்க உத்தரவிட்டார்.
இது வியாழக்கிழமை (13) போர்நிறுத்தம் குறித்து விவாதிக்கத் தயாராகும் நிலையில், மொஸ்கோ இராணுவ முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதற்கான சமிக்ஞையாகும்.
அண்மைய மாதங்களில் ரஷ்யாவின் போர் முனை முன்னேற்றங்களும், உக்ரேனில் மூன்று வருடங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இயங்கும் கெய்வ் போரில் தோல்வியடையக் கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
ட்ரம்பின் மத்திய கிழக்கு சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் வியாழக்கிழமை மொஸ்கோவிற்கு வந்து புட்டினை சந்தித்தார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் புதன்கிழமை போர்நிறுத்த யோசனை குறித்த விவரங்களை வழங்கியதாகவும், ரஷ்யா அதைப் பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரேன் ஆதரிப்பதாகக் கூறிய 30 நாள் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை மொஸ்கோ ஒப்புக் கொள்ளும் என்று நம்புவதாக ட்ரம்ப் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யப் படைகளின் மின்னல் தாக்குதலுக்குப் பின்னர் உக்ரேன் தனது நிலையை இழக்கவிருக்கும் மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்கு பச்சை நிற உருமறைப்பு சீருடையில் புட்டின் வருகை தரும் காட்சிகளை கிரெம்ளின் வெளியிட்டது.
இதன்போது பேசிய புட்டின்,
எதிர்காலத்தில், மிகக் குறுகிய காலத்தில், குர்ஸ்க் பிராந்தியத்தில் வேரூன்றியிருக்கும் எதிரியை (உக்ரேன்) தீர்க்கமாக தோற்கடிப்பதே எங்கள் பணி.
நிச்சயமாக, மாநில எல்லையில் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் – என்று கூறினார்.
எனினும், போர் நிறுத்த யோசனையை அவர் குறிப்பிடவில்லை.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று காயப்படுத்தியது, மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்ந்தது, நகரங்களை இடிபாடுகளாக்கியது.
மேலும், ஆறு தசாப்தங்களில் மொஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய மோதலைத் தூண்டியது.
கிழக்கு உக்ரேனில் இருந்து ரஷ்யப் படைகளைத் திசைதிருப்பவும், பேரம் பேசும் வாய்ப்பைப் பெறவும், புட்டினை சங்கடப்படுத்தவும், உக்ரேன் கடந்த ஆகஸ்ட் மாதம் எல்லையைத் தாண்டி குர்ஸ்க் பகுதிக்குள் நுழைந்தது.
இது 1941 ஆம் ஆண்டு நாஜி படையெடுப்பிற்குப் பின்னர் ரஷ்ய பிரதேசத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும்.
ரஷ்ய இராணுவத்தின் கூற்றுப்படி, கடந்த கோடையில் ஊடுருவலின் உச்சத்தில் 1,300 சதுர கிமீ (500 சதுர மைல்) இருந்த குர்ஸ்கில், இப்போது உக்ரேனின் பகுதி 200 சதுர கிமீ (77 சதுர மைல்)க்கும் குறைவாக உள்ளது.