காதலனின் வீட்டிற்குச் சென்ற காதலிக்கு நடந்த சோகம்!

தனது காதலனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வாதுவ, மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்த பிரசாதினி பிரியங்கிகா என்ற 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.

குறித்த பெண் காதலனின் பாட்டியை பார்க்க விரும்புவதாகக் கூறி தொலைபேசியில் அழைத்த பிறகு, காதலன் அவளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். 

பின்னர் அந்த இளைஞன் வீட்டின் பின்னால் ஆடுகளை மேய்க்கச் சென்றிருந்தான். 

அந்த இளம் பெண் வீட்டின் பின்புற சுவரின் அருகே காதலனுக்காக காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. 

அந்த நேரத்தில் சுவர் உடலின் மீது இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். 

இறந்த பெண்ணின் காதலன் பாதுகாப்புப் படையில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது. 

குற்றப்புலனாய்வு பிரிவினர் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  களுத்துறை வடக்கு  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *