உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச; விரைவில் நடவடிக்கை – ஜனாதிபதி அதிரடி

 

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்ச ஒருவர் இழப்பீடு பெற்றதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தலயில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இழப்பீடு பெற்ற ராஜபக்ச குறித்து விரைவில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த வீடு குறிப்பிட்ட ராஜபக்சவுக்குச் சொந்தமானது அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

நிலப் பத்திரம் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது, அதே நேரத்தில் வீடு மற்றொருவரின் பெயரில் உள்ளது. இருப்பினும், இழப்பீடு ஒரு ராஜபக்சவால் பெறப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் அடங்கிய அறிக்கை அண்மையில் தனக்குக் கிடைத்ததாகவும், அது இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *