
ஏ.எம்.ஏ.அஸீஸ் யாழ்ப்பாணத்தில் வன்னர்பண்ணையிலுள்ள பாரம்பரியமான உயர் குடும்பமொன்றில் 1911 அக்டோபர் 4ஆம் திகதி பிறந்தார். குழந்தை பருவத்தையும், முழுப் பாடசாலை நாட்களையும் யாழ்ப்பாணத்திலேயே கழித்தார். அவர் பிரபலமான ஹிந்து பாடசாலைகளில் கற்று ஒரு சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். நவம்பர் 24, 1973 இல் அவர் இறையடி சேர்ந்தார். டாக்டர் அஸீஸின் பாரம்பரியத்தை, பனிப்பாறையைப் போன்றது என நான் சில வேளைகளில் நினைத்ததுண்டு. காணக்கூடியது மிகச்சிறிய அளவாயினும் அவர் பற்றிய ஆழமான பெரும் பகுதி வரலாற்றில் மூழ்கியுள்ளது.