அஜித்குமாரின் 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து! சோகத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்  ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், நெல்லையிலுள்ள திரையரங்கொன்றில் வைக்கப்பட்ட  200 அடி உயரமான கட்  அவுட் (Cutout) ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்த  சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திரையரங்கிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கட் அவுட் முறையாக  வைக்கப்படாமையே இவ்விபத்துக்குக் காரணம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் குறித்த விபத்தின் போது உயிர் சேதம்  எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை   கட் அவுட்  சரிந்து விழும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில் ” குறித்த கட்அவுட் கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்றும் இதனால் உயிர் பலி ஏற்படக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இத் திரைப் படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு ஜி.வி. பிரகாஷ் இதற்கு  இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *