
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்புக்கு சென்ற சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவினரால், மட்டு. நகரில் வைத்து நேற்று முன் தினம் (8) மாலை கைது செய்யப்பட்ட பிள்ளையான், இரவோடிரவாக கொழும்பு கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.