வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர்(11.04.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா பெரலில் மீட்கப்பட்டது.
இதனையடுத்து, அதனை உடமையில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.