
பிங்கா ஓயாவின் துணை ஆறுகளில் இருந்து அக்குறணையில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்து அக்குறணை பொறியியலாளர்கள் சங்கம் (EAA) ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. 1990களின் பிற்பகுதியில் இருந்து ஆற்றின் மேற்பகுதிகளில் கட்டுமானங்களின் அதிகரிப்பு, கழிவு நீர் மற்றும் பிற கழிவுகளை கொட்டுதல், ஆற்றின் சமவெளிப்பகுதிகளின் இழப்பு மற்றும் பிங்கா ஓயாவின் வெள்ளநீர் ஊடுருவாத மேற்பரப்புக்கள் போன்றன வெள்ளம் ஏற்பட முக்கிய காரணங்களாகுகின்றன.