ரணிலின் விசாரணை தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு எடுத்துள்ள முடிவு

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் விசாரணைக்கு அழைக்க லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எனினும், 23 ஆம் திகதிக்கு பின்னர் விசாரணையை நடத்துவதற்காக பொருத்தமான திகதி ஆணைக்குழுவினால் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பணியாற்றிய காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பணம் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் விக்ரமசிங்கவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், புத்தாண்டு தினத்தன்று தானும் தனது வழக்கறிஞர்களும் கொழும்பில் இருந்து வெளியே இருப்பதாகவும், அதனால் அந்த திகதியில் தனக்கு வருகை தர முடியாது என ரணில் விக்ரமசிங்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு 23 ஆம் திகதிக்கு பிறகு ஒரு திகதியை நிர்ணயிக்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *