செம்பியன்பற்றில் இருந்து வெளியேறும் கரைவலை தொழிலாளர்கள்

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் அமைந்திருந்த கரைவலை வாடிகளை அகற்றும் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

செம்பியன்பற்று சென் பிலிப்நேரிஸ் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய சங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உழவியந்திரம் கொண்டு கரவலை தொழில் செய்வது  முற்றாக  தடை செய்யப்பட்டது

இதனை மீறி பல மாதங்களாக அப்பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு  தொழில்புரிந்து வந்த கரைவலை தொழிலாளர்களை அகற்றும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது

பொலிஸார் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளின் உத்தரவுக்கமைய  குறித்த பகுதிகளில் பணிபுரிந்த கரைவலை தொழிலாளர்கள் தங்களுடைய உடமைகளுடன் வெளியேறுவதை காணக் கூடியதாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *