திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
முல்லைத்தீவு copcity இல் கடந்த 17ஆம் திகதி கூரைபகுதி உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான apple i phone கையடக்க தொலைபேசி ஒன்றும் , 52,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளது. அதனையடுத்து குறித்த வங்கி நிர்வகத்தினரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து குறித்த copcity இல் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கருவியின் உதவியுடன் குறித்த திருடன் பிடிக்கப்பட்டுள்ளார். திருடியதாக கூறப்படும் சந்தேகநபர் குறித்த அப்பிள் அதி திறன் பேசியின் படத்தை முகநூலில் பதிவிட்டு தன்னிடம் i phone இருப்பதாக வெளிக்காட்டியுள்ளார். குறித்த பதிவையும் cctv காட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு நேற்றையதினம் (20.04.2025) குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்காெண்டு வருகிறார்கள்.