அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு, மீதொட்டமுல்லையில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டில் டொன் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்நதுடன் அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் டேன் பிரியசாத் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.