துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொன் பிரியசாத் உயிரிழப்பு- பொலிஸார் அறிவிப்பு..!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் இன்று(23)காலை உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெல்லம்பிட்டியவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று(22) இரவு 9:10 மணியளவில் டான் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டான் பிரியசாத்  உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு இன்று(23) மீண்டும் அறிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரே டான் பிரியசாத் மீது மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதேவேளை துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது தோளில் இரண்டு துப்பாக்கிச் சன்னங்களும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சன்னங்களும் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *