வவுனியாவில் 30 போத்தல் கசிப்புடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் பகுதியில் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்றையதினம் இரவு வீடொன்றில் சோதனை செய்த பொலிஸார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 பேர் சட்டவிரோத சாராயத்தை கைப்பற்றினர்.
அதனை உடைமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 48 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.