சர்வதேச திரைப்பட விழாவில் மன்னார் இளைஞனுக்கு கிடைத்த சிறப்பு விருது: குவியும் பாராட்டுக்கள்..!

Salt House Creative  சர்வதேச திரைப்பட விழாவில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் கவிவர்மன் 2025 ஆம் ஆண்டிற்கான “சிறந்த இயக்குநர்” எனும் சர்வதேச விருதைப் பெற்றுள்ளார்.

சர்வதேச அவுஸ்திரேலிய திரைப்படப் போட்டிக்காக 28 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் குறித்த இளைஞன் சர்வதேச விருதை  தட்டி சென்றுள்ளார் 

கடந்த வருடம் இவ் இளைஞனின் ”மடமை தகர்” என்ற  திரைப்படம் வெளியாகி உள்ளூர் ரீதியாக பல பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில் தற்போது சர்வதேச ரீதியாகவும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

குறித்த திரைப்படம்  தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது எனும் கதை கருவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாக காணப்படுவதோடு  கடந்த வருடம் இத்திரைப்படம் மன் சன் சினிமா திரையரங்கில் வெளியிடப்பட்டது.

குறித்த குறும்படம் பல்வேறு விமர்சனங்கள் பல தரப்பட்ட மக்களின் பாராட்டுகள் என்பவற்றை பெற்ற நிலையில் Salt House Creative  நடாத்திய சர்வதேச திரைப்பட போட்டியில் சிறந்த இயக்குநருக்கான விருதை தன்வசப்படுத்தியுள்ளது.

சர்வதேச நாடு ஒன்றில் மன்னார் இளைஞன் சிறந்த குறும்பட இயக்குநருக்கான விருதை பெறுவது இதுவே முதல் முறை.

இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *