
முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் குறித்த கருத்தாடல்களை அடுத்து நாம் புதிய சட்ட வரைபைத் தயாரித்துப் பூரணப்படுத்தியிருந்ததுடன் அதற்கு சட்டமா அதிபர் ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு, சட்டமாக நிறைவேற்றுவதை மாத்திரமே செய்யவேண்டியிருக்கிறது என முன்னாள் நீதியமைச்சரும், வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.