தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தெற்கில் வெற்றி பெற்றிருந்தாலும், பல சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெறத்தவறியிருப்பது ஒரு அபாய எச்சரிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,
ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என நீங்கள் கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.
சாதாரண மக்கள் மெச்சக்கூடியவகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, செயற்திறன்மிக்க பொதுநிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நிலைநிறுத்துங்கள்.
காலவோட்டத்தில் மக்கள் கடந்தகாலத்தைப் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் இழப்பார்கள்.
அவர்கள் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதனாலேயே தற்போதைய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.
அன்றேல் இதுவும் வெறுமனே ‘நல்லாட்சி அரசாங்கம் – 2’ ஆக மாறிவிடும். என தெரிவித்துள்ளார்.