
‘பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக’ இந்தியா நேற்று நள்ளிரவில் அறிவித்தது. ஆனால், இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயம் அடைந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.