
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த மே 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்துள்ளது. இத்தேர்தலில் 43.26 சதவீத வாக்குகளையே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆளும் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் அக் கட்சி 42.31 வீத வாக்குகளையும் பாராளுமன்றத் தேர்தலில் 61.5 வீத வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தலில் ஒரு சரிவை சந்தித்துள்ளது.