
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை காஸாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு அங்கீகாரம் அளித்த சில மணி நேரங்களின் பின்னர், இஸ்ரேலில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன. இஸ்ரேலின் பாராளுமன்றமான நெசெட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, காஸாவில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.