
சென்ற 2025.04.17இல் வெளிவந்த விடிவெள்ளி வார இதழில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் ஐந்தாம் பந்தியிலும், இறுதிப் பந்தியிலும் மாவட்ட அல்லது பிரதேச கிளைகளில் பதவி தாங்குபவர்கள் கட்சி அரசியலில் ஈடுபட்டு வேட்பாளர்களாக செயற்படுகின்றமை ஜம்இய்யாவின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் அதன் கூட்டுப் பணிகளுக்கும் பாதகமாக அமையும் என நிறைவேற்றுக்குழுவின் அவசர கூட்டத்தின்போது கலந்து கொண்ட அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் வரவேற்கப்படக்கூடிய ஒன்றாகும். இதற்காக ஜம்இய்யாவை எவ்வளவு தூரம் பாராட்டினாலும் தகும்.