ஸ்ரீ சபாரத்தினத்தின் 39ஆவது நினைவேந்தல் வவுனியாவில் அனுஸ்டிப்பு..!

வவுனியாவில் சிறி சபாரட்ணத்தின் 39 ஆவது நினைவு தினம் இன்று(10) வவுனியா மாநகரசபை மண்டபத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது சிறிசபாரட்ணத்தின் உருவ படத்திற்கு தீபம் ஏற்றி, மலர்மாலை அணிவித்து, மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது

நிகழ்வில் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுபபினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தம் கருணாகரன், சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உள்ளிட்ட பலரும், மதகுருமார், கட்சி உயர் பீட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *