முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை மணக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் இடையே சில மாதங்களாக நட்பு இருந்து வந்ததாகவும், அது தற்போது காதலாக மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா இருவரும் விரைவில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவுள்ளனர் எனவும் ஓகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.