
தேசிய மக்கள் சக்தியின் பெயரை ‘தேசிய சலவை கட்சி’ என்று மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகள் மற்றும் மாற்றுக் கொள்கையுடையவர்களை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என்றார்கள். ஆனால் தற்போது பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். ஊழல்வாதிகளை சலவை செய்தா கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

