ஒற்றையர் பிரிவில் 100-வது பட்டம் வென்று ஜோகோவிச் சாதனை!

டென்னிஸ் அரங்கில் மற்றுமொரு சாதனையாக முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் தனது நீண்ட நாள் கனவினை நிறைவேற்றியிருந்தார். 9 மாதங்களுக்கு முன்னர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 99வது பட்டத்தை பதிவு செய்திருந்த ஜோகோவிச் இன்னும் ஒரு தொடரை வெற்றிக்கொண்டால் 100வது வெற்றி என்ற ரீதியில் அந்த ஒரு வெற்றிக்காக கடந்த 9 மாதங்களாக கடுமையாக போராடியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த ஜெனிவா பகிரங்க தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் போலாந்து வீரர் ஹபேர்ட் ஹர்க்கஸை எதிர்கொண்டு 5-7,7-6,7-6 என கைப்பற்றி வெற்றிப்பெற்று தனது 100வது ATP பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். முதல் சுற்றில் ஹபேர்ட்டிடம் தோல்வியடைந்த ஜோகோவிச் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சுதாகரித்துக்கொண்டார்.

இறுதிவரை போராடிய ஜோகோவிச் 7-6 என அவ்வாட்டத்தை கைப்பற்றி போட்டியில் நிலைத்தார் பின்னர் தீர்மானமிக்க 3வது சுற்று ஆரம்பமாகியதும் மீண்டும் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். டை பிரேக்கர் வரை போட்டிகள் நீண்டிருந்த நிலையில் இறுதியில் அந்த செட்டையும் 7-6 என கைப்பற்ற தனது 100வது தொடர் வெற்றியை கைப்பற்றி சாதனைபடைத்தார் நோவாக் ஜோகோவிச்.

இந்நிலையில் டென்னிஸ் ஜாம்பவான் ஜிம்மி கோன்னோர்ஸ் 109 தொடர்களை கைப்பற்றி அதிக வெற்றிகளை பெற்றவர் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். புல்தரையின் மன்னன் என வர்ணிக்கப்படும் ரோஜர் பெடரர் 103 வெற்றிகளுடன் இரண்டாமிடத்திலும் அந்த வரிசையில் தற்போது 100 வெற்றிகளுடன் ஜோகோவிச் 3மிடத்திற்கு முன்னேறி சாதனை பட்டியளில் இடம்பிடித்துள்ளார்.

4 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், கடைசியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் கடந்த ஆண்டு தங்கம் வென்றிருந்தார். அதன் பின்னர் அவர் பட்டம் வெல்லவில்லை. மியாமி மாஸ்டர்ஸ் மற்றும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அவர் தோல்வியை தழுவி இருந்தார்.


இந்நிலையில் தனது வெற்றிக்குறித்து கருத்து தெரிவித்த ஜோகோவிச்
100-வது முறையாக பட்டம் வெல்வது எண்ணி தான் பெருமை கொள்கின்றேன்.அதற்காக தான் பயிற்சி கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். களிமண் தரையில் வெற்றிப்பெற்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ச்சியா பயிற்சிகள் தான் எனக்கு இந்த வெற்றியை பெற்று தந்திருக்கிறது. அடுத்து பிரன்ஸ் பகிரங்க தொடரில் உத்வேகமாக களமிறங்க இந்த வெற்றி ஒரு காரணமாக அமைந்திருக்கிறது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *