
ஒருவர் அதிகமாக பார்க்க விரும்புகின்ற உள்ளடக்கங்கள் ஆபத்தானவையாக இருந்தால், உதாரணத்திற்கு தற்கொலை தொடர்பான, அல்லது தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல் தொடர்பான வீடியோக்களை ஒருவர் அதிகம் பார்வையிட்டால் டிக் டாக் நிறுவனம் அத்தகைய உள்ளடக்கங்களையே அவருக்கு பெற்றுக் கொடுக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த நபர் தவறான தீர்மானங்களை மேற்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. சிறுவர்கள் ஆரோக்கியமான விடயங்களை பார்வையிட்டால் ஆரோக்கியமான விடயங்களை பெற்றுக் கொள்வார்கள்.