விபத்தை எதிர்நோக்கும் ஆயிஷா மகாவித்தியாலய மாணவிகள்; சாலையில் பாதுகாப்பற்ற சூழல்!

கந்தளாய் தி/ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலில் வீதியை  கடக்க வேண்டிய  நிலை உருவாகி வருகின்றது.

கந்தளாய் தி/ஆயிஷா மகளிர் மகாவித்தியாலயத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவிகளும், 38 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கல்வி மற்றும் கல்வி சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த  பாடசாலை முடியும் வேளைகளில், குறிப்பாக பொலிஸ் பாதுகாப்பு இல்லாத நாட்களில், மாணவிகள் பாதுகாப்பற்ற சூழலில் வீதியை  கடக்க வேண்டிய  நிலை உருவாகி வருகின்றது.

பாடசாலை விடுகின்றபோது, சில பெற்றோர்கள் மற்றும் முட்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களில் வரும் நபர்கள், விதிகளை மீறி நேரடியாக பாடசாலை முன் நெரிசலை உருவாக்குகின்றனர். 

இதனால் மாணவிகள் வீதியை  கடக்கும் போது  அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது

இதனால் ஆசிரியர்கள் பெரும் மனஅழுத்தத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

“பாதுகாப்பின்றி மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப முடியாத நிலைமை உள்ளது. இது தொடர்ந்து நீடித்தால் பெரும் உயிரிழப்பு நேரிடக்கூடும்,” என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையை மாற்ற பொலிசார், கல்வி அதிகாரிகள் மற்றும் நகரசபை உடனடியாக கவனம் செலுத்தி, சீரான போக்குவரத்து ஒழுங்கை நிலைநிறுத்த தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பெற்றோரும், பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *