Austrian Grand Prixயை யை வெற்றிக்கொண்டார் லெண்டோ நொரிஸ்

இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன, 24 சுற்றுக்களை கொண்டதாக இம்முறை கிரோன்ப்ரீ போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இதுவரை 10 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 5 போட்டிகளில் பியாஸ்ட்ரி வெற்றிப்பெற்று அசத்தியிருந்தார்.

வெஸ்டாபன் மற்றும் நொரிஸ் இரண்டு போட்டியிலும் ரஸ்ஸல் ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றிருந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் 11வது குரொன்ப்ரீ போட்டி ஒஸ்ட்ரியாவின் ரெட்புல் ரிங் அரங்கில் ஆரம்பமாகியது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கார்லோ சைன்ஸின் வாகனம் கோளாரை சந்தித்ததால் அவர் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் 70 சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பமே முன்னனி வீரர்களின் ஆக்ரோஸமான தொடக்கத்துடன் சூடுபிடிக்க தொடங்கியது.

லெக்லர்க்,பியாஸ்ட்ரி ஆரம்பமே முன்னிலை பெற்று அசத்தினர். ஏனைய வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னிலைப்பெற முயன்றனர். இதன்போது என்டினெலி வெஸ்டாபனின் வாகனத்தை சேதத்திற்குட்படுத்தினார். பெரும் எதிர்ப்பார்ப்புடன் களமிறங்கிய வெஸ்டாபன் போட்டியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். லூயிஸ் ஹெமில்டன் 3 மிடத்தில் போட்டியை தொடர்ந்தார்.

9வது சுற்றில் வைத்து அலெக்ஷாண்டர் அல்பேன் 6 மிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

11வது சுற்றில் வைத்து நொரிஸ் மற்றும் பியாஸ்ட்ரி ஆகியோருக்கிடையில் முதலிடத்திற்கான போட்டி சூடுபிடித்தது. ஒரே அணியை சேர்ந்த இருவரும் முதலிடத்திற்கு போட்டி போட்டு கொண்டனர். இருவரும் மாறி மாறி முதலிடத்திற்கு முன்னேறினார்கள் அதேபோன்று 3ம் மற்றும் 4ம் இடத்திற்கும் ஒரே அணியை சேர்ந்த வீரர்களுக்குள் போட்டி நிலவியது. லெக்லர்க் 3 மிடத்தில் போட்டியை தொடர்ந்தார்.

14வது சுற்றில் வைத்து நொரிஸ் ஓடபாதையை விட்டு வாகனத்தை செலுத்தி அவரின் வாகனத்தின் டயரை சேதப்படுத்திகொண்டார் இதனால் அவரால் இன்னும் வேகமாக வாகனத்தை செலுத்த முடியாத நிலை உருவாகியது.

15வது சுற்றில் வைத்து சுனேடோ அவரின் முந்தைய வாகனத்துடன் மோதியதால் அவருக்கு பெனால்ட்டி புள்ளிகள் வழங்கப்பட்டது.

17வது சுற்றில் வைத்து மேற்கொண்டு போட்டியை தொடர முடியாது என அலெக்ஷாண்டர் அல்பர்ன் போட்டியிலிருந்து வெளியேறினார்.

20வது சுற்றில் வைத்து முதலிடத்திற்கான போட்டி தொடர்ந்துகொண்டிருந்தது. நொரிஸ் மற்றும் பியாஸ்ட்ரி போட்டியில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தார்கள.

54வது சுற்றில் வைத்து பியாஸ்ட்ரி பிட்ஸ்டொப் வாய்ப்பிற்கு வந்தார். 57வது சுற்றில் வைத்து போர்ட்டெலெட்லோ 8மிடத்தில் போட்டி தொடர்ந்து கொண்டிருந்தார்.

69வது சுற்றில் வைத்து முதல் 5 இடங்கள் மாறாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. அலன்சோ இப்பருவகாலத்தில் தனது சிறப்பான செயற்பாட்டி வெளிப்படுத்தி 7மிடத்தில் போட்டியை தொடர்ந்தார்.

இந்நிலையில் 70 சுற்றுக்களையும் 1மணித்தியாலம் 23 நிமிடங்கள் 47 செக்கன்களில் போட்டி தூரத்தை நிறைவு செய்து ஒஸ்ரியன் குரொன்ப்ரீ சம்பியான மாற்றதம் பெற்று அசத்தினார். பியாஸ்ட்ரி 2மிடத்திலும் லெக்லர்க் மற்றும் ஹெமில்டன் 3 மற்றும் 4ம் இடத்தில் போட்டியை நிறைவு செய்தனர். இப்பருவகாலத்தில் தனது 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் லெண்டோ நொரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *