
காஸாவில் கடந்த ஐந்து வாரங்களில் இஸ்ரேலிய துருப்பினர் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களில் நிவாரன உணவுப் பொதிகளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த 600 க்கும் அதிகமான அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக உதவி தேடுபவர்களையும், கூடாரங்களில் தஞ்சம் புகுந்த மக்களையும் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் காஸா முழுவதும் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.