
வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய மாவனெல்லை, கிரிந்தெனிய பகுதியை சேர்ந்த மொஹம்மட் சுஹைல் எனும் இளைஞன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எந்த குற்றமும் புரியவில்லை என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுராத ஹேரத், கல்கிசை மேலதிக நீதிவான் ஹேமாலி ஹால்பந்தெனியவுக்கு நேற்று அறிவித்தார். அதனால் அவரை பிணையில் விடுவிக்குமாறும் அவர் கோரினார்.