
கல்குடா மஜ்லிஸ் சூரா சபையின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போராட்டம் இரண்டாம் நாளாகவும் நேற்று இடம்பெற்றதுடன் இன்றைய தினமும் தொடராக இதனை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.