
ராஜபக்ஷக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்மங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் முஸ்லிம் சமூகத்தில் ஒரு தரப்பினர் தவறான வழிக்குள் தள்ளப்பட்டார்கள். இவ்வாறான பின்னணியில் தான் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன. மைத்திரி – ரணில் இருவருக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து அரசியல் ரீதியிலான நெருக்கடியை ராஜபக்ஷக்கள் ஏற்படுத்தினார்கள். இதனால் நல்லாட்சி அரசாங்கம் பலவீனடமடைந்தது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.