
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன், சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனைவியும் ஒருவர்.